நடுக்கடலில் விஸ்வாசம்! வேற லெவலுக்கு சென்ற தல ரசிகர்கள்!
Ajith fans viswasam celebration in sea
இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் விஸ்வாசம். வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து 4-வது முறையாக அஜித்துடன் கூட்டணி அமைத்துள்ளார் சிவா.
அஜித்துடன் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என சகல அம்சங்களுடன் நிறைந்துள்ளதாக படம் பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய தரமான படம் இது என்றும் புகழ்ந்து வருகின்றனர்.
குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், சுமைகளை அவர்கள் மேல் சுமத்தாமல் எப்படி காக்க வேண்டும் என இயக்குனர் தெளிவாக தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ரசிகர்களை கண் கலங்க வைக்கும் அளவிற்கு அஜித் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
பொதுவாக அஜித் படம் வெளியானாலே ரசிகர்கள் கொண்டாட்டம் ஆரவாரமாக இருக்கும். இந்த நிலையில் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் நடுக்கடலில் விஸ்வாசம் பேனரை வைத்து சிறப்பித்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.