Wow... அல்டிமேட் லெவலில், ஸ்டைல் மன்னனாக தல அஜித்.. வைரல் கிளிக் இதோ.!
Wow... அல்டிமேட் லெவலில், ஸ்டைல் மன்னனாக தல அஜித்.. வைரல் கிளிக் இதோ.!
நடிகர் அஜித் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அல்டிமேட் சூப்பர்ஸ்டார், தல என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுவர் நடிகர் அஜித் குமார். தற்போது நடிகர் அஜித் குமார், இயக்குனர் மகிழ் திருமேனியுடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: விரைவில் திரைக்கு வருகிறது ஜிவி பிரகாஷின் பிளாக்மெயில் திரைப்படம்; டப்பிங் பணிகள் தொடக்கம்.!
பொங்கலுக்கு 2025 வெளியீடு
இப்படத்தின் படப்பிடிப்புகள் அசர்பைஜான் நாட்டில் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில், படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது, அனிரூத் படத்தின் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் க்ளிக்
படப்பிடிப்புகள் அணிவதும் நிறைவுபெற்றுள்ளதால், அஜித் தொடர்ந்து தனது இருசக்கர வாகன பயணத்தில் ஆர்வம் காண்பித்து இருக்கிறார். அவ்வப்போது ரசிகர்கள் அஜித்தை நேரில் சந்திக்கும் புகைப்படங்களை எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நடிகர் அஜித் காதில் கடுகனுடன் ஸ்டைலாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: பார்க்கிங் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு; நினைவை பகிர்ந்த ஹரிஷ் கல்யாண்.!