விடாமுயற்சி படத்திற்காக அஜித்குமார் செய்யும் செயல்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.!
விடாமுயற்சி படத்திற்காக அஜித்குமார் செய்யும் செயல்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியான நிலையில் தற்போது வரை எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாததால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார்.
இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்திற்குகாக அஜித் குமார் தனது உடல் எடையை குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான விவேகம் மற்றும் துணிவு திரைப்படங்களில் உடல் எடை அதிகரித்து காணப்பட்டதால் பலரும் விமர்சனம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.