வாழு.. வாழ விடு! நடிகர் அஜித் மேலாளர் வெளியிட்ட நெத்தியடி பதில்! ஏன் நடந்தது என்ன??
வாழு.. வாழ விடு! நடிகர் அஜித் மேலாளர் வெளியிட்ட நெத்தியடி பதில்! ஏன் நடந்தது என்ன??
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடித்து அண்மையில் வெளிவந்த திரைப்படம் வலிமை. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
மேலும் சிலர் வலிமை படம் குறித்தும், நடிகர் அஜித்தின் உடல் அமைப்பையும் கிண்டல் செய்து விமர்சனம் செய்துள்ளனர். இந்நிலையில் பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அஜித் தரப்பில் பல கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வரும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது அவர் ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அஜித்தின் 30வது திரையுலக ஆண்டினை முன்னிட்டு அஜித் சார்பில் டுவிட்டரில், ரசிகர்கள், நடுநிலையாளர்கள், வெறுப்பாளர்கள் மூவரும் ஒரு நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களிடமிருந்து வரும் அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வரும் வெறுப்பையும், நடுநிலையாளர்களிடமிருந்து வரும் விமர்சனத்தையும் நான் மனமார ஏற்கிறேன். வாழு, வாழவிடு… எப்போதும் நிபந்தனையற்ற அன்புடன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதனையே ரீடுவிட் செய்து யாருக்கெல்லாம் இது தற்போது தேவைப்படுமோ அவர்களுக்காக இதை மறுபகிர்வு செய்கிறேன். எப்பொழுதும் நிபந்தனையற்ற அன்பு அஜித்குமார் என குறிப்பிட்டுள்ளார்.