தேசிய அளவில் தொடரும் வேட்டை, கெத்து காட்டும் அஜித்.!செம உற்சாகத்தில் தல வெறியர்கள்!!
ajith selected national level gun shooting

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிகர் என்பதை தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறைகளிலும் கெத்து காட்டுவார் தல அஜித்.
சமீபத்தில் தல அஜித் இணைந்து பணியாற்றிய தக்ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடந்த UAE மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது.
இந்நிலையில் எப்பொழுதும் புதுபுது விஷயத்தை கற்றுக்கொள்வதில் அதிகளவு ஆர்வம் காட்டிவரும் அஜித்தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பாக கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டார். கடந்த 27-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் மிக சிறப்பாக செயலாற்றி அஜித் வெற்றி பெற்றுள்ளார் .
அதனைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொள்ள அஜித் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.