பெண் பைக்ரேசருக்கு வாழ்த்து கூறிய அஜித்.! செம உற்சாகத்துடன் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!! இணையத்தையே கலக்கும் வீடியோ இதோ!!
ajith wish to women bike racer alishabdullah
தமிழ் சினிமாவில் பணத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் நடிக்கவேண்டும் என்ற ஆசையே இல்லாதவர் தல அஜித். இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்கிறார். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவருக்கு பல பிரபல நடிகர், நடிகையர்களே பெரும் ரசிகர்களாக உள்ளனர்.
அதுமட்டுமின்றி இவரது ஒவ்வொரு படங்கள் வெளியாகும் நாட்களையும், அவரது பிறந்தநாளையும் ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர். அஜித் சிறந்த நடிகர் மட்டுமின்றி கார் பைக் ரேஸ், அறிவியல் மற்றும் விளையாட்டு என பல திறமைகளைக் கொண்டு விளங்குகிறார்.
மேலும் துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் சமீபத்தில் கலந்துகொண்டார். இவ்வாறு அஜித் இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது முதல் பெண் பைக் ரேஸரும், நடிகையுமான அலிஷா அப்துல்லா அஜித் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அஜித் அவரை வாழ்த்தும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.
அதில் இது குறித்து அவர் அதில் என்னுடைய சூப்பர் பைக்கை வாங்கி ஓட்டி பார்த்த பின்னர் எனது பைக்கில் அமர்ந்தவாறு ஆல் தி பெஸ்ட், நன்றாக செய்யுங்கள். கவனமாக இருங்கள் என்று வாழ்த்து கூறினார் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது தீயாய் பரவி வருகிறது.