மாஸ்.. பக்கா மாஸ்.. 'ஏகே 62' பட டைட்டில் இதுவா.?! பெயரே மிரட்டலா இருக்கு.!
மாஸ்.. பக்கா மாஸ்.. 'ஏகே 62' பட டைட்டில் இதுவா.?! பெயரே மிரட்டலா இருக்கு.!
கடந்த ஜனவரி 11ம் தேதி அன்று தல அஜித்குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் வணிகரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. இதனைத் தொடர்ந்து ஏகே 62 படத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கின. அஜித்தின் 62-வது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது.
ஆனால், சில காரணங்களால் ஏகே 62விலிருந்து விக்னேஷ் சிவன் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்குனர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்குயிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதற்கு முன்பாக தடையறத் தாக்க, மீகாமன் மற்றும் கழகத் தலைவன் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் மகிழ் திருமேனி. இவர்தான் தற்போது ஏகே 62 திரைப்படத்தையும் இயக்கயிருக்கிறார்.
இத்திரைப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குனர் மகிழ் திருமேனி, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். அஜித் தற்போது விடுமுறைக்காக 'யூரோப்' சென்றுள்ளதால் இப்படத்தின் பூஜைகளில் கலந்து கொள்ளவில்லை.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைகளை பற்றி அறிவிப்புகள் எதுவும் தற்போது வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த திரைப்படத்திற்கான பெயர் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அது விரைவில் வெளியிடப்படும் எனவும் சினிமா வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த செய்திகளின்படி ஏகே 62 படத்திற்கு 'டெவில்' என பெயரிடப்பட்டுள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவிலேயே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.