ஊரடங்கால் தவித்த 3600 நடனக் கலைஞர்களுக்காக.. நடிகர் அக்ஷய் குமார் செய்த பலே காரியம்! குவியும் வாழ்த்துக்கள்!!
நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி பெரும் பாதிப்புகளை ஏ
நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் நாட்டின் பல பகுதிகளில் தற்போது தளர்வில்லா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள் பலரும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு திரையுலகப் பிரபலங்கள், தன்னார்வலர்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார் ஊரடங்கால் கஷ்டப்படும் திரைப்பட நடன கலைஞர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். அதாவது 3600 நடன கலைஞர்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப்பொருட்களை வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.
அக்ஷய் குமார் கடந்த ஏப்ரல் மாதம் கவுதம் காம்பீரின் அறக்கட்டளைக்கு ரூ 1 கோடி நிதியுதவி அளித்தார். மேலும் அக்ஷய் குமாரும், ட்விங்கிள் கண்ணாவும் 100 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளையும் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்களின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.