விஜய் தொலைக்காட்சி விருதுகள் ! சிறந்த மருமகளுக்கான விருதை யார் பெற்றுள்ளார் பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் மக்களை பொழுதுபோக்கும் வகையில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான ச
விஜய் தொலைக்காட்சியில் மக்களை பொழுதுபோக்கும் வகையில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் மற்றும் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும், ரசிகர்களை கவரும் வகையிலும் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பெருமைப்படுத்தி, கெளரவிக்கும் வகையில் விஜய் தொலைக்காட்சி விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றுள்ளது. அதில் சிறந்த மருமகளுக்கான விருது ராஜாராணி 2 நடிகை ஆலியா மானசாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் ராஜா ராணி 2. இதில் ஹீரோயினாக சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடித்துவருகிறார். இவர் இதற்கு முன்பே ராஜா ராணி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் ஆலியா விருதுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.