ப்பா.. வேற லெவல்! தனி ஆளாக கெத்து காட்டும் ஆலியா மானசா! வீடியோவை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ராஜாராணி தொ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ராஜாராணி தொடரில் கார்த்தி மற்றும் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா. இத்தொடரின் மூலம் இவர்களுக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
ராஜாராணி தொடரில் கணவன், மனைவியாக நடித்த இருவரும் பின்னர் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அந்த அழகிய ஜோடிக்கு தற்போது ஐலா என்ற அழகிய மகள் உள்ளார். குழந்தை பிறந்த பிறகு சற்று உடல் எடை அதிகரித்திருந்த ஆலியா தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். மேலும் அவர் தற்போது விஜய் டிவியில் ராஜாராணி 2 சீரியலிலும் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஆலியா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் குழந்தையின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார். இந்த நிலையில் ஆலியா தற்போது தனி ஆளாக அசத்தலாக தான் பைக் ஓட்டும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.