மகன் பிறந்த நேரத்தில் சஞ்சீவ்- ஆலியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் சஞ்சீவ் வெளியிட்ட வீடியோ இதோ...
மகன் பிறந்த நேரத்தில் சஞ்சீவ்- ஆலியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் சஞ்சீவ் வெளியிட்ட வீடியோ இதோ...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ராஜா ராணி தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சஞ்சீவ்-ஆலியா மானசா. இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. தொடரில் கணவன், மனைவியாக நடித்த இருவரும் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு ஐலா என்ற அழகிய மகள் உள்ளார். இந்த நிலையில் இரண்டாவதாக கர்ப்பமாக இருந்த ஆலியா மானசாவிற்கு கடந்த மார்ச் 27ம் தேதி அழகிய ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் சஞ்சீவ் மற்றும் ஆலியா இருவரும் யூடியூப் சேனல் வைத்திருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதில் குழந்தையின் வீடியோக்கள் மற்றும் வீட்டில் நடக்கும் விசேஷசன்கள் என பல வகையான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ்களை பெற்று வருகின்றனர். இதையடுத்து தற்போது அவர்கள் யூடியூப் சேனல்கு கோல்ட் ஷீல்ட் பரிசாக கிடைத்துள்ளது. மகன் பிறந்த கையோடு அவர்களுக்கு கோல்ட் ஷீல்ட் கிடைத்திருப்பது பெறும் மகிழ்ச்சி என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ....