தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரமாண்ட பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை நிராகரித்த நடிகை அமலா பால்.! இதுதான் காரணமா?? ஷாக்கான ரசிகர்கள்!!

பிரமாண்ட பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை நிராகரித்த நடிகை அமலா பால்.! இதுதான் காரணமா?? ஷாக்கான ரசிகர்கள்!!

Amala paul refuse the chance to act in ponniyin selvan movie Advertisement

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படம் இரு பாகங்களாக உருவாகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

amala paul

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக நடிகை அமலா பாலுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டதாம். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்துவிட்டதாக பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனில் கலந்துகொண்டேன். நான் இயக்குனர் மணிரத்னத்தின் பெரிய ரசிகை. ஆனால் அப்பொழுது படம் துவங்கவில்லை. அதனால் நான் ரொம்ப ஏமாற்றமடைந்தேன். 

பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு மணிரத்னம் மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக எனக்கு அழைப்பு விடுவித்தார். அப்பொழுது நான் மனநிலை சரியில்லாமல் இருந்தேன். அதனால் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன். ஆனால் அதற்காக நான் வருத்தப்படவில்லை என கூறியுள்ளார். 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#amala paul #ponniyin selvan #maniratnam
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story