சமந்தாவை அசிங்கப்படுத்திய பிரபல ஓடிடி நிறுவனம்.! கடுப்பான ரசிகர்கள்..
சமந்தாவை அசிங்கப்படுத்திய பிரபல ஓடிடி நிறுவனம்.! கடுப்பான ரசிகர்கள்..
சினிமா துறையின் முன்னணி நடிகையானா சமந்தா பல மொழிகளில் திரைபடங்கள் நடித்து ரசிகர்கள் என்றும் ரசிக்கும் நடிகையாக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் நடித்து வெளியான 'சாகுந்தலம்' திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
'சகுந்தலம்' என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட 'சாகுந்தலம்' திரைப்படம் குணசேகரன் என்ற தெலுங்கு இயக்குனர் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் தேவி மோகன், அல்லு அர்ஜுனின் மகள், அதிதி பாலன் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த தமிழ் புத்தாண்டு அன்று திரையரங்கில் வெளியான இப்படம் பலத்த தோல்வியைடைந்தது.
இதனையடுத்து தற்போது அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆக உள்ளது. அமேசான் பிரைமில் திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டால் முன்பாகவே அந்த திரைப்படத்திற்கான ட்ரெய்லர் ரிலீஸ் செய்து அப்படத்தில் நடித்த நடிகர்களின் பெயர்களை ட்விட் செய்து விளம்பரம் செய்வார்கள். ஆனால் 'சாகுந்தலம்' திரைப்படத்திற்கு ட்ரெய்லர் எதுவும் வெளியிடவில்லை. மேலும் அமேசான் பிரைம் பதிவிட்டுள்ள ட்விட்டில் சமந்தாவின் பெயர் இடம் பெறவில்லை என்று சமந்தா ரசிகர்கள் திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.