பாலிவுட் ஸ்டார் அமீர்கான் மகளுக்கு இப்படியொரு திறமையா? அவரே வெளிட்ட வீடியோவால் வாயைப் பிளந்த ரசிகர்கள்!
அமீர்கான் மகள் ஐரா நபர் ஒருவருக்கு டாட்டூ வரைந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் அமீர் கான். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் அமீர்கான் தொடர்ந்து ஏதாவது படங்களை கொடுக்க வேண்டும் என்பது இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அசத்தலாக நடித்து வருகிறார்.
இவ்வாறு உலகளவில் பிரபலமான அமீர்கானுக்கு 1986 ஆம் ஆண்டு ரனா தத்தா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஜுனைத் என்ற மகனும், ஐரா என்ற மகளும் உள்ளனர். அதனைத் தொடர்ந்து ரனா தத்தாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர் 2005 ஆம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அசாத் ராவ் கான் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் ஜொலித்து வரும் ஐரா கான் தற்போது டாட்டூ கலைஞராக மாறியுள்ளார். மேலும் அவர் முதன்முதலாக நபர் ஒருவருக்கு டாட்டூ போட்ட வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ஆச்சரியத்துடன் அவரை பாராட்டி வருகின்றனர்.