பிரபல முன்னணி நடிகருக்கு கொரோனா உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. ஒரு நாளைக்கு 40 ஆயிர
இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. ஒரு நாளைக்கு 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கும் அவலமும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அமீர் கான். இவர் படத்திற்காக ரிஸ்க் எடுத்து எதையும் செய்யகூடியவர். இவருக்கு ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் அமீர் கானுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமை படுத்திகொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைப்படி உரிய மருந்துகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர் தற்போது நலமாக இருப்பதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் ரசிகர்கள் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.