காதலர் தின ஸ்பெஷல்.! கியூட்டாக ரொமான்ஸ் செய்யும் அமீர்- பாவனி.! வைரலாகும் வீடியோ!!
காதலர் தின ஸ்பெஷல்.! கியூட்டாக ரொமான்ஸ் செய்யும் அமீர்- பாவனி.! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் பாவனி. அவர் அதற்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி, சின்னதம்பி போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். பாவனி ஏற்கனவே திருமணம் ஆனவர். அவரது கணவர் சில காரணங்களால் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் பாவனி பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சக போட்டியாளரான அமீர் அவருக்கு ப்ரபோஸ் செய்தார். ஆனால் அதற்கு பாவனி எந்த பதிலும் அளிக்கவில்லை. பின் இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடியாக நடனமாடி டைட்டில் வின்னர் ஆனர். நிகழ்ச்சியின் போது அமீர் பாவனியிடம் தொடர்ந்து தனது காதலை கூறியநிலையில் பாவனி ஒருவழியாக அவரது காதலை ஏற்றுகொண்டார்.
அதனைத் தொடர்ந்து இருவருக்கும் எப்பொழுது திருமணம் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு பாவனி மற்றும் அமீர் இருவரும் நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் கியூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். அது வைரலாகி வருகிறது. அதனை கண்ட நெட்டிசன்கள் மீண்டும் அவர்களது திருமணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.