அமெரிக்காவில் ரிலீசுக்கு முன்பே மாபெரும் சாதனை படைத்த சலார் திரைப்படம்.!
அமெரிக்காவில் ரிலீசுக்கு முன்பே மாபெரும் சாதனை படைத்த சலார் திரைப்படம்.!
இந்தியாவில் சமீபமாக ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்கள் உலகளவில் கவனிக்கப்படுகின்றன. சீனா, ஜப்பான், ரஷியா, அமெரிக்கா போன்ற சர்வதேச மேலை நாடுகளிலும் அவை நல்ல வரவேப்பை பெறுகின்றன.
கடந்த பல ஆண்டுகளாக ஜப்பானில் ரஜினிகாந்தின் படத்திற்கு கிடைத்த வரவேற்பு தற்போது விஜய், பிரபாஸ், ராம் சரண் ஆகியோரின் படத்திற்கும் கிடைத்து வருகிறது.
கே.ஜி.எப் படத்தின் வெற்றி இரண்டு பாகத்தையும் சேர்த்து அந்நாட்டில் வெளியிட வைத்துள்ளது. இந்நிலையில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் திரைப்படம் செப்டம்பர் மாதம் 28ம் தேதி உலகளவில் வெளியாகிறது.
இந்த படம் அமெரிக்காவில் 1979 திரையரங்கில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் ரிலீசாகி, அமெரிக்காவில் பெருவாரியான திரையரங்கில் ரிலீஸ் செய்யப்படும் படத்தின் பட்டியலில் சலார் முதலிடம் பிடித்துள்ளது.
முன்னதாக வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 1165 திரையரங்கிலும், ராதே ஷியாம் 776 திரையங்கிலும், அஃஞ்ஞாதவாசி 515 திரையரங்கிலும், சர்க்கார் வாரிபாடா 486 திரையரங்கிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.