நயன்தாராவிற்கு பதில் ஆன்ட்ரியா.. மனுஷி திரைபடத்தின் அசத்தல் ஃபர்ஸ்ட் லுக்..!
நயன்தாராவிற்கு பதில் ஆன்ட்ரியா.. திரைபடத்தின் ஃபர்ஸ்ட்லுக்..!
தமிழ் சினிமா திரைப்பட உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்த நயன்தாரா நடித்த அறம் படத்தை இயக்கியவர் கோபி நயினார் என்பவர். இப்படம் வெளியான நாட்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதனைத்தொடர்ந்து கோபி நயினார் நயன்தாராவிற்கு மனுஷி என்ற கதையை எழுதி வைத்திருந்தார். இந்த நிலையில், நயன்தாரா வேறு பல படங்களில் கமிட் மென்ட் கொடுத்து விட்டதால் அவருக்காக காத்திருந்த கோபி நயினார் வேறு ஒரு நடிகையை தேர்வு செய்தார்.
தற்போது இந்த படத்திற்கு ஆண்ட்ரியாவை தேர்வு செய்து படத்தை தொடங்கி படப்பிடிப்புகள் வெற்றிகரமாக சத்தமின்றி செயல்பட்டு வருகின்றது. படத்தினை வெற்றிமாறனின் கிராஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
இதனையடுத்து ஆண்ட்ரியாவின் பிறந்த நாளையொட்டி நேற்று படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டு படம் பற்றி தகவல்கள் முறையாக வெளியிட்டிருக்கின்றனர். இவ்வாறு வெளியான போஸ்டரை சூர்யா தனது டுவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.