"அந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்" நடிகை ஆன்ட்ரியாவின் ஓபன் டாக்.!?
அந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் நடிகை ஆன்ட்ரியாவின் ஓபன் டாக்.!?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், பாடகியாகவும் வலம் வருபவர் ஆன்ட்ரியா. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார். கதாநாயகியாகவும், குணசித்திர கதாபாத்திரங்கள், பாடகி என பல திறமைகளை கொண்ட ஆன்ட்ரியா பாடிய பாடல்கள் பல ஹிட் அடைந்துள்ளன.
குறிப்பாக அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா, வேட்டையாடு விளையாடு படத்தில் கற்க கற்க, ஆதவன் படத்தில் ஏனோ ஏனோ போன்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவ்வாறு நடிகையாக, பாடகியாக மட்டுமல்லாமல் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருந்து வருகிறார்.
சமீபத்தில் புதுச்சேரியில் இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தினார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆதரவு கிடைத்தது. மேலும் இவர் நடிப்பில் வெளியான வடசென்னை, பிசாசு 2, போன்ற திரைப்படங்கள் மிகப் பெரும் வெற்றி அடைந்தது. இவரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வந்தது.
தற்போது கா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புபணிகள் முடிந்து திரையில் வெளிவர தயாராகிக் கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்த படத்தின் பிரமோஷன் பணிக்காக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அதில், எனக்கு ஹாரர் வயலன்ஸ் திரைப்படங்களை பார்க்க பிடிக்காது, ஆனால் நடிக்கும் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். பார்ப்பது வேறு, நடிப்பது வேறு" என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.