வெளிநாட்டில் ஜாலியாக சுற்றி வரும் ஆண்ட்ரியா.. வெளியான புகைப்படத்தை பார்த்து ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!?
வெளிநாட்டில் ஜாலியாக சுற்றி வரும் ஆண்ட்ரியா.. வெளியான புகைப்படத்தை பார்த்து ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!?
தமிழ் திரை துறையில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஆண்ட்ரியா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஆண்ட்ரியா மிஸ்கின் இயக்கத்தில் 'பீட்சா 2' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் ஆண்ட்ரியாவின் அடுத்த திரைப்படங்களுக்கான அறிவிப்பு குறித்து ரசிகர்கள் இணையத்தில் கேட்டு வருகின்றனர்.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும், திரைத்துறையிலும் பிசியான நடிகையாக இருந்து வரும் ஆண்ட்ரியா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது வெளிநாட்டில் வசிக்கும் ஆண்ட்ரியா, அங்கு ஜாலியாக சுற்றி திரியும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து ஷேர் செய்து வருகின்றனர்.