காதலர் தினத்தன்று ஒரு விஷயம் இருக்கு! விஜய் டிவி ஜாக்குலின் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!
காதலர் தினத்தன்று ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட இருப்பதாக சின்னத்திரை நடிகையும், தொகுப்பாளினியுமான ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பார்ப்போர் அனைவரையும் வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் சில சீசன்களை தொகுப்பாளர் ரக்சனுடன் இணைந்து தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜாக்குலின். கரகரப்பான குரலை கொண்டிருந்தாலும், கலகலப்பான இவரது பேச்சு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.
அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் கால்பதித்த அவர் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது . பின்னர் சின்னத்திரை ஹீரோயினாக அவதாரம் எடுத்த அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பிஏ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜாக்குலின் காதலர் தினத்தில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் வாழ்க்கையில் ஒரு புதிய பயணத்தை தொடங்க இருக்கிறேன். இதுவரைக்கும் நீங்கள் என்னை உங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து கொடுத்த ஆதரவுக்கு நன்றி. மேலும் நாம் இப்போது செய்யப்போகும் விஷயத்துக்கும் இதேமாதிரியான ஆதரவை எதிர்பார்க்கிறேன். வாழ்க்கை மிகவும் சிறியது. எப்போது மகிழ்ச்சியாக இருங்கள். என்ன விஷயமென யூகியுங்கள் என நடிகை ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.