விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பது யார் தெரியுமா?
Anika as ajith daughter in visuvaasam movie
இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து நடித்துள்ளார் தல அஜித். வீரம், வேதாளம், விவேகம், தற்போது விசுவாசம். வீரம், வேதாளம் திரைப்படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் விவேகம் படம் படு தோல்வி அடைந்தது. இந்நிலையில் அதே கூட்டணி நான்காவது முறையாக விசுவாசம் படத்தில் இணைந்துள்ளது.
பொங்கலை முன்னிட்டு விசுவாசம் திரைப்படம் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், வசூல் ரீதியாக படம் வசூலை வாரி குவிகிறது. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
நயன்தாரா, ரோபோ சங்கர், தம்பி ராமையா என பலரும் விசுவாசம் படத்தில் நடித்துள்ளனர். படத்தில் அஜித், நயன்தாராவிற்கு மகளாக அணிக்கா நடித்துள்ளார். இவர் ஏற்கனவே என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவிற்கு மகளாக நடித்திருந்தார்.
விசுவாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடிப்பிலும், சென்டிமென்டிலும் மிக சிறப்பாக நடித்துள்ளார் சிறுமி அணிக்கா