அட.. குட்டி நயனை பார்த்தீர்களா! 16 வயதில் ஹீரோயின்களையே ஓரம்கட்டும் அளவிற்கு இப்படியொரு போட்டோஷூட்டா!!
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகாவின் போட்டோசூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு மகளாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் அனிகா. அதனைத் தொடர்ந்து அவர் நானும் ரவுடிதான், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் மீண்டும் விஸ்வாசம் இப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து அவர் மறைந்த நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று கதையான குயின் என்ற வெப்தொடரிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் அனிகா அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை கிறங்கடிக்க வைப்பார். இவரை நெட்டிசன்கள் அனைவரும் குட்டி நயன் என அழைக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது அனிகா நீல நிற உடையில் ஹீரோயின்களையே ஓரம் கட்டும் அளவிற்கு அசத்தலான போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் 16 வயதில் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.