லியோ படபிடிப்பிலிருந்து, அனிருத் வெளியிட்ட வீடியோ வைரல்.!?
லியோ படபிடிப்பில் அனிருத் வெளியிட்ட வீடியோ...டிரெண்டிங்காக பரவி வருகிறது!?
கடந்த பிப்ரவரி 3ஆம் தேதியன்று லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியானது. விஜய் நடிக்கும் லியோ படத்தின் டைட்டில் வீடியோ பல ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று ஆளுக்கு ஒரு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
லோகேஷ் இயக்கி வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் இறுதியில் பகத் பாசிலை காஷ்மீரில் பார்த்ததாக ஜோஸ் பேசும் வசனங்களை பகிர்ந்து அங்கிருந்துதான் லியோ படம் ஆரம்பிக்கும் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். இதை உண்மையாக்கும் வகையில் லியோ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் காஷ்மீரில் நடைபெறுவதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
விஜய்யும், த்ரிஷாவும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு லியோ திரைப்படத்தில் ஒன்று சேர உள்ளனர். தளபதிக்கு மட்டுமில்லாமல் த்ரிஷாவுக்கும் லியோ 67ஆவது திரைபடமாகும். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர், விக்ரம் போன்ற படங்கள் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக அனிருத் இசை அமைந்திருக்கிறது.
இந்நிலையில், லியோ பட ப்ரமோ பாடல் ரசிகர்களை பெரிதும் ஈர்த்து இருக்கிறது. இந்தப் பாடல் உருவானதை வீடியோவாக அனிருத் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.