அடுத்தடுத்து நான்கு படங்கள்.. எல்லாம் உங்களால் தான்! இசையமைப்பாளர் அனிருத் கூறியதை பார்த்தீங்களா!!
அடுத்தடுத்து நான்கு படங்கள்.. எல்லாம் உங்களால் தான்! அனிருத் கூறியதை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் அனிருத். அவரது பாடல்கள் என்றாலே மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். பல டாப் ஹீரோக்களின் படங்களின் வெற்றிக்கு அனிருத்தின் பாடல்களும் கைகொடுத்துள்ளது.
இந்த ஆண்டு தொடங்கியது முதல் அனிருத் பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெல்லாம் செம ட்ரெண்டானது. இந்நிலையில் விக்ரம் படம் நேற்று ரிலீசாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் 2022ஆம் ஆண்டு பிறக்கும் போது, அதை எப்படி இதைக் கடக்கப்போகிறோம் என நினைத்தேன். ஏப்ரல் 13 முதல் ஜூன் 3 வரை, எங்களிடம் நான்கு படங்கள் கையில் இருந்தது. பீஸ்ட்டில் தொடங்கி, காத்து வாக்குல ரெண்டு காதல், டான் மற்றும் விக்ரம் வரை. என் பாடல்களின் மீதான உங்கள் அன்புதான் இதனை சாத்தியமாக்கியது. எங்கள் இசைக்குழுவின் கலைஞர்கள் இல்லாமல் இது நடந்திருக்காது. விக்ரம் திரைப்படத்தை நாங்கள் ரசித்தது போலவே நீங்களும் ரசிப்பீர்கள் என நம்புகிறோம். நான் எப்போதும் சொல்வது போலதான் இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது என கூறியுள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.