அட.. என்னம்மா இதெல்லாம்! திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா! ஒத்த புகைப்படத்தால் ஷாக் கொடுத்த கொடி நாயகி!!
அட.. என்னம்மா இதெல்லாம்! திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா! ஒத்த புகைப்படத்தால் ஷாக் கொடுத்த கொடி நாயகி!!
மலையாள சினிமாவில் நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டான திரைப்படம் பிரேமம். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார்.
மேலும் அவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக, ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார். அவர் தற்போது பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அடிக்கடி வித்தியாசமான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் அதில் அவர் என் தந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் என பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா?? என ஷாக்காகி கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர் இது ஏதேனும் படத்திற்காக எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறி வருகின்றனர். ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்திய இப்புகைப்படத்தை குறித்து அனுபமாதான் விளக்கமளிக்க வேண்டும்.