என்னால் கட்டுபடுத்தவே முடியாது.. நடிகை அனுஷ்காவிற்கு இப்படியொரு நோயா?? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
என்னால் கட்டுபடுத்தவே முடியாது.. நடிகை அனுஷ்காவிற்கு இப்படியொரு நோயா?? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
தமிழில் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரெண்டு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. முதல் படத்திலேயே ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த அவர் தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் அருந்ததி, ருத்ரமாதேவி, பாகமதி என கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் அசத்தலாக நடித்திருந்தார். மேலும் பிரபாஸ் உடன் இணைந்து அவர் நடித்த பாகுபலி திரைப்படம் உலகளவில் செம ஹிட்டானது. இவ்வாறு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்த அவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றினார். ஆனால் பின்னர் அவரால் அதனை குறைக்க முடியவில்லை. எடையை குறைக்க பல முயற்சிகள் மேற்கொண்ட அவருக்கு பின்னர் பட வாய்ப்புகளும் பெருமளவில் அமையவில்லை.
இந்த நிலையில் 35 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை அனுஷ்கா அண்மையில் பேட்டி ஒன்றில் தான் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு அரிய வகை சிரிக்கும் நோய் உள்ளது. அதாவது நான் சிரிக்க ஆரம்பித்தால் தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை சிரித்து கொண்டே இருப்பேன். என்னால் அப்பொழுது சிரிப்பை கட்டுப்படுத்த முடியாது. அவ்வாறு சிரித்துக் கொண்டே இருப்பதால் படப்பிடிப்பை நிறுத்த வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.