"எனக்கு இந்த படம் தான் ரொம்ப பிடிக்கும்" ஏ.ஆர் ரஹ்மான் மனம் திறந்து கூறிய விஷயம்.!
எனக்கு இந்த படம் தான் ரொம்ப பிடிக்கும் ஏ.ஆர் ரஹ்மான் மனம் திறந்து கூறிய விஷயம்.!
விண்வெளிப் பொறியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம் "ராக்கெட்ரி". இப்படத்தை மாதவன் இயக்கி, நம்பி நாராயணன் கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்தப் படம் கடந்த ஆண்டு ரிலீசானது. தற்போது 69வது தேசியத் திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த படமாக 'ராக்கெட்ரி' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படத்தை இயக்கிய மாதவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்துப் பேசிய இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான், " வாழ்த்துக்கள் மாதவன். ராக்கெட்ரி படம் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஓப்பன்ஹெய்மர் படத்தை விட, இந்தப் படமே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.
ஓப்பன்ஹெய்மர் படம் உலகளவில் மிகப்பெரிய வெற்றியையும், பாராட்டுக்களையும் பெற்றிருந்தது. இப்படத்தை கிறிஸ்டோபர் நோலன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.