×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மறைந்த தன் அம்மாவின் நினைவு நாளில், ஏ.ஆர் ரகுமான் வெளியிட்ட உருக்கமான வீடியோ! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!!

மறைந்த தன் அம்மாவின் நினைவு நாளில், ஏ.ஆர் ரகுமான் வெளியிட்ட உருக்கமான வீடியோ! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!!

Advertisement

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தனது தாயின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரகுமான். அவர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக கொடிகட்டி பறக்கிறார்.

 இவருக்கென இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் ஏ.ஆர் ரகுமான் தனது பாடலுக்காக ஏராளமான தேசிய விருதுகளையும், ஆஸ்கர் விருதினையும் பெற்றுள்ளார். ஏ.ஆர் ரகுமானின் தந்தை அவரது சிறுவயதிலேயே காலமான நிலையில் தாய் கரீமா பேகம் அவரை வளர்த்து வந்துள்ளார். அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்த நிலையில் அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏ.ஆர் ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில் அதனை கண்ட பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#AR Rahman #Anniversary #mother
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story