மகள் செய்த காரியத்தால் கதறி கதறி அழுத தொகுப்பாளினி அர்ச்சனா! என்னதான் நடந்தது? வைரல் வீடியோ!!
மகள் செய்த காரியத்தால் கதறி கதறி அழுத தொகுப்பாளினி அர்ச்சனா! என்னதான் நடந்தது? வைரல் வீடியோ!!
தொகுப்பாளினி அர்ச்சனா மகள் சாரா கொடுத்த பிறந்தநாள் பரிசால் இன்ப அதிர்ச்சியில் கதறி அழுத வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.
சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினிகளுள் ஒருவராக இருந்தவர் அர்ச்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்த அவர் பின் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து அர்ச்சனா தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அர்ச்சனாவின் மகள் சாரா. அவரும் தனது அம்மாவுடன் சேர்ந்து சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் சாரா சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கக் கூடியவர்.
இந்தநிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா சமீபத்தில் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்பொழுது அவரது மகள் சாரா மோதிரம் ஒன்றை பரிசாக அளித்து தனது அம்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதனைக் கண்டு இன்ப அதிர்ச்சியில் அர்ச்சனா கதறி அழுதுள்ளார். அந்த வீடியோவை அர்ச்சனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.