சின்ன தாய் கிழவி.. எடக்குமடக்காக ரசிகர் கேட்ட கேள்வி! அர்ச்சனாவின் மகள் கொடுத்த பதிலடியை பார்த்தீர்களா!
சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேட்ட கேள்விக்கு அர்ச்சனாவின் மகள் சாரா பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். பின்னர் டபுள் எவிக்சனில் ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர்.
அதனை தொடர்ந்து கடந்த வாரம் ஆரி, ரியோ, அர்ச்சனா, ஷிவானி, ஆஜித், அனிதா, சோம் ஆகியோர் நாமினேட்டான நிலையில் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பிய அர்ச்சனா மிகவும் உற்சாகத்துடன் தனது மகளுடன் செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை அர்ச்சனாவின் மகள் சாரா My Bossy Kumaru is back and I’m lovin it!!! கடவுள் இருக்கான் குமாரு என மகிழ்ச்சியாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டார்.
இதனை கண்ட, ரசிகர் ஒருவர் சாராவிடம் அன்பு ஜெயிக்குமுன்னு நம்பறியா குமாரு என பதிவிட்டிருந்தார். அதற்கு அவர் ”கண்டிப்பாக” என பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொருவர் டிரஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டியா சின்ன தாய் கிழவி, Freeze டாஸ்க் வரும் பிக்பாஸ் உள்ள வந்து சீன் போடலாம்னு பாத்தியா என்று கமெண்ட் செய்ததற்கு சாரா மிகவும் பக்குவமாக கும்பிடுவது போன்ற எமோஜி போட்டிருந்தார்.