வாவ் என்ன அழகு... முதன்முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட ஆர்யா - சாயிஷா தம்பதியினர்... வைரலாகும் அழகிய புகைப்படம்!!
வாவ் என்ன அழகு... முதன்முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட ஆர்யா - சாயிஷா தம்பதியினர்... வைரலாகும் அழகிய புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கஜினிகாந்த் திரைப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்த சாயிஷா என்பவருடன் காதல் வயப்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். பின் 2019 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் ஆர்யா, சாயிஷா தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதியினருக்கு 2021 ஆம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆரியானா என பெயர் வைத்தனர். இந்நிலையில் குழந்தை பிறந்தது முதல் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் வரை குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாத நிலையில் தற்போது ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சாயிஷா தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.