தளபதிக்கு போட்டியாக களமிறங்கிய ஆக்சன் கிங்... வெளியான புதிய தகவல்.! ரசிகர்கள் ஆர்வம்!
தளபதிக்கு போட்டியாக களமிறங்கிய ஆக்சன் கிங்...வெளியான புதிய தகவல்.! ரசிகர்கள் ஆர்வம்!
தமிழ் சினிமாவில் 'ஆக்சன் கிங்' என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். கதாநாயகனாக நடித்து வந்த இவர் சமீப காலமாக வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மங்காத்தா மற்றும் இரும்புத் திரை போன்ற திரைப்படங்களில் இவர் நடித்த எதிர்மறை கதாபாத்திரங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் இவருடன் சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், த்ரிஷா மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நடிகர் அர்ஜுனுக்கு செயற்கையாக மேக்கப் போட்டு போட்டோ ஷூட் நடத்தப்பட்டதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. தினம் தினம் லியோ படத்தில் இருந்து வரும் அப்டேட்டுகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயரச் செய்து கொண்டே இருக்கிறது. இந்தத் திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.