சினிமாவில் கால்பதிக்கும் பிரபல தமிழ் நடிகரின் மகள்! யார் அந்த நடிகர் தெரியுமா?
Arun pandiyan daughter keerthi entry in cinema
தமிழில் பிரபபலமான நடிகர்களில் ஒருவர் அருண் பாண்டியன். தமிழில் ஒருசில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் அருண் பாண்டியன். நடிப்பையும் தாண்டி தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார் அருண் பாண்டியன்.
இந்நிலையில் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி விரைவில் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் ஹரி ராம் இயக்கும் படமொன்றில் இவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த கனா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில், நடித்த தர்ஷன் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம்.
அருண் பாண்டியனின் தயாரிப்பு நிறுவனத்தை சிங்கப்பூரில் இருந்து கவனித்துவந்த கீர்த்தி தற்போது நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். ஏற்கனவே பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. சில படங்கள் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் ஆக இருந்தும் அதனை ஏற்க முடியவில்லை. தற்போது இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதன் முக்கிய காரணமும் இந்த படத்தின் கதை தான் என கூறியுள்ளார்.