அவர் விட்டு சென்றதை தொடர்ந்து செய்வேன்.! விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் அருண் விஜய் அளித்த உறுதி.!!
அவர் விட்டு சென்றதை தொடர்ந்து செய்வேன்.! விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் அருண் விஜய் அளித்த உறுதி.!!
நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவரது மறைவு அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாததால் நடிகர் அருண் விஜய் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சண்டை பயிற்சியில் எனக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது. அதனால் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. ஒன்றரை மாதம் கழித்து இப்போதான் வெளியே வந்துள்ளேன். முதலில் அவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என எண்ணி இங்கு வந்தேன்.
விஜயகாந்த் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.
சினிமாவில் நடிக்க வருபவர்கள் ரஜினி சார், கமல் சார் போல ஆகவேண்டும் என எண்ணி வருவர். ஆனால் நான் விஜயகாந்தை போல சண்டைக்காட்சிகளில் புதிதாக ஏதாவது செய்து மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என ஆசைப்பட்டே சினிமாவுக்கு வந்தேன். அவருடைய இழப்பு மிகப்பெரிய இழப்பு. எவ்வளவோ நல்ல விஷயங்களை அவர் செய்துள்ளார். இப்படியொரு சிறந்த மனிதரை தமிழ் திரையுலகும், தமிழ்நாட்டு மக்களும் இழந்துவிட்டோம்.
அவர் தான் செய்த நல்ல விஷயங்களை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என எண்ணுவார். இனி நான் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவருக்கும் ஒரேவிதமான உணவே வழங்கப்படும். அதை கண்டிப்பாக நான் தொடர்ந்து செய்வேன். நடிகர் சங்க வளாகத்தை திருப்பி மீட்டுக் கொடுத்தவர் விஜயகாந்த். நடிகர் சங்க கட்டிடத்துக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கையும் என அருண் விஜய் தெரிவித்துள்ளார்.