சூர்யா படத்தில் இணையும் மூன்று தலைமுறைகள் நடிகர்கள்! யார்னு பார்த்தீர்களா? வைரலாகும் வேற லெவல் புகைப்படம்!
சூர்யா தயாரிப்பில் உருவாகும் படத்தில் விஜயகுமார்,அருண் விஜய் மற்றும் அவரது மகன் அர்னவ் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர்.
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தாலும் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த திறமையான நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய். இவர் பல திரைப்படங்களில் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் அவர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்தது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.
அதனைத் தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது. மேலும் அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டானது. அருண் விஜய் முன்னணி நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவியின் மகனாவார். நடிகர் விஜயகுமாரும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பல சாதனைகளை படைத்து பிரபலமடைந்தவர். அருண் விஜய் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆர்த்தி மோகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பூர்வி என்ற மகளும் அர்னவ் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும், சரோவ் சண்முகம் இயக்கும் புதிய படத்தில் விஜயகுமார், அருண் விஜய், அர்ணவ் என மூன்று தலைமுறைகளும் ஒன்றாக நடிக்கவுள்ளனர். இப்படம் குழந்தைகளை மையமாக கொண்டு உருவாகிறது. இந்நிலையில் தங்கள் மூவரும் ஒன்றாக நடிப்பது குறித்து பெருமையாக கூறி, அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை அருண்விஜய் மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதனை தொடர்ந்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.