கடைசியாக தனது மனைவியின் முகத்தை பார்க்க இயக்குனர் அருண்ராஜா காமராஜ் எப்படி வந்துள்ளார் பார்த்தீர்களா! கண்கலங்கவைக்கும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டு விளங்குபவர் அருண்ர
தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டு விளங்குபவர் அருண்ராஜா காமராஜ். இவரது மனைவி சிந்துஜா. இருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 38 வயது நிறைந்த சிந்துஜா அவர்கள் நேற்று நள்ளிரவில் உயிரிழந்துள்ளார். இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அருண்ராஜா காமராஜ் தனது மனைவியின் முகத்தை கடைசியாகப் பார்க்க, இறுதிச்சடங்குகள் செய்ய பிபிஇ கிட்டுடன் உடையில் வந்துள்ளார். மேலும் அவருடன் உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திக்கேயன் ஆகியோர் இருந்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி கண்கலங்க வைத்தது.
இந்நிலையில் அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்துஜாவிற்கு அஞ்சலி செலுத்திய புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின், நேர்த்தியான இயக்குனர் - நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.