உடற்பயிற்சியின் போது, கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த விபத்து! ஷாக் வீடியோவை வெளியிட்ட நடிகர் அருண் விஜய்!
Arunvijay share his exercise accident video

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அருண் விஜய். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். குழந்தை பருவத்தில் இருந்து நடித்துவரும் அருண் விஜய் முறை மாப்பிளை என்ற படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். மேலும் அடுத்ததாக அவர் பல படங்களில் நடித்து வந்தாலும், எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
ஆனாலும் தொடர்ந்து கடுமையாக உழைத்து வந்த அருண் விஜய், அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தற்போது ஊரடங்கால் சூட்டிங் எதுவும் இல்லாத நிலையில், வீட்டில் நேரத்தை செலவிட்டு வருகிறார். நடிகர் அருண் விஜய் தனது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். மேலும் அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்பவர்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது பழைய உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு, ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதாவது அந்த வீடியோவில் அருண்விஜய் தலைகீழாக உடற்பயிற்சி செய்யும் போது கீழே விழுந்துள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்த அவர் உங்களது கருவிகளை ஆராய்ச்சி செய்யாமல் உடற்பயிற்சிகளில் ஈடுபடாதீர்கள். நான் கீழே விழுந்த சமயத்தில் இருந்து சரியாக ஒரு வாரத்திற்கு காலில் வீக்கம் இருந்தது. நல்லவேளை என் தலையில் அடிபடவில்லை. கடவுளுக்கு நன்றி. பயிற்சியாளர்கள் அல்லது கண்காணிப்பாளர்கள் இல்லாமல் உடற்பயிற்சி செய்யாதீர்கள்'' என்று அறிவுரை தெரிவித்துள்ளார்.