கதறி அழுத நிவா.! போறப்ப கூட இந்த அசல் செய்த வேலையை பார்த்தீங்களா.! வைரலாகும் வீடியோ!!
கதறி அழுத நிவா.! போறப்ப கூட இந்த அசல் செய்த வேலையை பார்த்தீங்களா.! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 6 சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் முதல் வாரத்தில் ஜி.பி முத்து தனது பிள்ளைகளை காண வேண்டும் என கூறி தானாக வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து சாந்தி மாஸ்டர் குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட் ஆனார்.
அவரை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் அசல் கோலார் எலிமினேஷன் செய்யப்பட்டார். இண்டிபெண்டன்ட் சிங்கராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர் அசல் கோலார். அவர் டாஸ்க்குகளை சிறப்பாக செய்து சவாலான போட்டியாளராக திகழ்வார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் எதனையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஜாலியாக இருந்து வந்தார். மேலும் அவர் பெண் போட்டியாளர்களிடம் சில சில்மிஷ வேலைகளையும் செய்து வந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.
அவர் சிங்கப்பூரை சேர்ந்த போட்டியாளரான நிவாசினியிடம் மடியில் படுப்பது, கட்டிப்பிடிப்பது, உரசுவது, கடிப்பது என அத்துமீறி வந்தார். இந்த நிலையில் அசல் வெளியேறும்போது நிவாஷினி கதறி அழுதுள்ளார். அப்பொழுது அசல், அப்படி இப்படி இருக்கணும்னா நீயும் வெளியே வந்து விடு. அது எப்படின்னு யோசி என கூறிவிட்டு சென்றுள்ளார்.