இரத்தக்காவு கேட்டு துடிக்கும் பில்லி - சூனிய ஏவல்.. "அஷ்டகர்மா" கூறும் ஆணித்தர உண்மைகள்.!
இரத்தக்காவு கேட்டு துடிக்கும் பில்லி - சூனிய ஏவல்.. அஷ்டகர்மா கூறும் ஆணித்தர உண்மைகள்.!
உலகளவில் பல அமானுஷ்யம் சம்பந்தமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. கான்சுரிங், அனபெல்லா, தி நன், லைட்ஸ் அவுட் போன்ற பல்வேறு ஹாலிவுட் திரைப்படமும், அரண்மனை, முனி, காஞ்சனா, டிமாண்டி காலனி, பிசாசு போன்ற தமிழ் படங்களையும் நாம் பார்த்திருப்போம். இவை அனைத்தும் பெரும்பாலும் பழிவாங்க துடிக்கும் பேய்கள் தொடர்பான கதையாக இருக்கும். ஆனால், பில்லி - சூனிய ஏவளின் மூலமாக உருவான ஷிவாங்கி போன்ற சொற்ப அளவிலான படங்களே இடம்பெற்றுள்ளது.
தற்போது மீண்டும் ஒரு பில்லி, சூனிய பேய் ஏவல் தொடர்பான கதையம்சம் கொண்ட அட்டகாசமான திரைப்படம் வெளியாகியுள்ளது. இயக்குனர் விஜய் தமிழ்செல்வன் இயக்கத்தில், அறிமுக நடிகர் சி.எஸ். கிஷனின் அருமையான நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் "அஷ்டகர்மா". இந்த படத்தில் நந்தினி ராய், ஸ்ரீதா சிவதாஸ் உட்பட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்த படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், பல வருடங்கள் கழித்து பில்லி, சூனியம் தொடர்பான கதை வந்துள்ளதாகவும், அதனால் பாதிக்கப்பட்டு தங்களின் வாழ்க்கையில் பெரும் துயரை கடந்து வந்தவர்களும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
கதையின் நாயகனாக உள்ள கிஷன் மனநல மருத்துவர் ஆவார். அதனால் அவருக்கு பேய், பிசாசு போன்ற மூடநம்பிக்கை அறவே கிடையாது. தொலைக்காட்சியில் இதுகுறித்து நடந்த விவாதத்தில் கலந்துகொண்ட கிஷனிடம் மந்திரவாதி ஒருவர் நான் சொல்லும் வீட்டில் தங்குங்கள் என்று கூற, அந்த சவாலையும் நாயகன் ஏற்றுக்கொள்கிறார். ஏற்கனவே அந்த வீட்டில் தங்கி உருகுலைந்துபோன குடும்பத்தினர் விபரீதம் வேண்டாம் என எச்சரிக்க, சவாலில் தான் தோற்றாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் மந்திரவாதி சவாலை கைவிட கோரிக்கை வைக்க நாயகன் எதையும் கேட்கவில்லை.
அனைத்து எச்சரிக்கையும் மீறி வீட்டிற்குள் செல்லும் நாயகனுக்கு என்ன நடக்கிறது. அந்த வீட்டில் இருந்த பில்லி, சூனிய ஏவல் செய்யும் கொடுமைகள் என்ன? இரத்த காவு வாங்க துடிக்கும் பேயிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார்?. பில்லி - சூனிய ஏவல் இறுதியில் அகற்றப்பட்டதா? என்பதே முழுநீள கதை. மனநல மருத்துவராக இருக்கும் கிஷன் பலருக்கும் பேய், பிசாசு இல்லை என்று கூறி வந்த நிலையில், வீட்டில் நடக்கும் மர்மத்தை கண்ணெதிரே பார்த்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தை காப்பாற்ற முயல்கிறார். அதனை யார் வைத்தார்கள் என்ற கேள்வி எழும்போது, அதனை கண்டறியும் போது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி தான் காத்திருக்கிறது.
பல பரபரப்புடன் கதை பயத்துடன் நகர்ந்து செல்ல, பில்லி சூனிய பிரச்சனையை அனுபவித்து வந்தவர்களுக்கு காட்சிகள் தங்களது வாழ்நாட்களின் கருப்பு நாட்களை கண்ணெதிரே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இறுதியில் டி.ஆர் பாடல் கிளைமேக்ஸை தூக்கி நிறுத்தியுள்ளது. 4 வேதங்களில் உள்ள ஒருவேதத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தலைப்பு, படத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. பழிவாங்க காத்திருக்கும் பேய்களுக்கு மத்தியில், பில்லி சூனியத்தால் ஏற்படும் பிரச்சனையையும் திரைப்பட இயக்குனர் அழுத்தம் திருத்தமாக கூறி இருக்கிறார்.