பிக்பாஸ் டைட்டில் வின்னர் மற்றும் இரண்டாமிடம் இவர்கள் தான்! அடித்துக்கூறும் ஜோதிடர் பாலாஜி ஹாசன்!
astrologer balaji talk about bigboss winner

கடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா மோதும்., அதேசமயம் இந்திய அணி தோற்க நேரிடும் என்று கடந்த ஜனவரி -1ஆம் தேதி சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன் தனது கணிப்பை வெளியிட்டிருந்தார்.
அதே போல் மக்களவை தேர்தல் கணிப்பில் மோடி தான் தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைப்பர் என கணித்திருந்தார். ஆரம்பத்தில் இதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் தேர்தல் முடிவுக்கு பின்னர் இவரிடம் ஜோதிடம் பார்க்க பலர் ஆர்வம் காட்டினர்.
இந்நிலையில் இவர், தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என்பதை கணித்து கூறியுள்ளார். அதில் அவர் கூறுகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் தான் வெற்றி பெறுவார் என்றும், இரண்டாம் இடத்தை பிடிக்க போவது ஒரு பெண் போட்டியாளர் என்றும் கூறியுள்ளார்.
அவர் கூறியபடி பார்த்தால் இந்த நிகழ்ச்சியில், வெளிநாட்டில் இருந்து கலந்து கொண்டுள்ள ஆண் போட்டியாளர்கள், இலங்கையை சேர்ந்த தர்ஷன் மற்றும் மலேசியாவை சேர்ந்த, முகென் ராவ் ஆகியோர் தான். லாஸ்லியா அல்லது ஷெரினா ஆகியோர் பைனல் வரை செல்லும் போட்டியாளர்கள் லிஸ்லிட்டில் இருப்பதால் இரண்டாவது இடத்தை இவர்கள் பிடிக்க வாய்ப்பு உள்ளது என கணித்துள்ளார். இவரது கணிப்பு பலிக்குமா என்பது பிக்பாஸ் இறுதியில் தெரிந்துவிடும்.