அசுர வேகத்தில் பாயும் அசுரன் படம்! இதுவரை இத்தனை கோடி வசூலா - உற்சாகத்தில் ரசிகர்கள்
Asuran dhanush vasual
வடசென்னையை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் அசுரன். இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தின் கதை மக்கள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
இந்த படம் வெளியானது முதல் தனுஷ் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் வசூல் சாதனையும் படைத்து வருகிறது. ஆனால் தனுஷ் தனது வெற்றியை கூட கொண்டாட முடியாமல் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது வரை அசுரன் படம் ஹீட் அடித்து வசூல் சாதனையில் உலகம் முழுவதும் 58 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது. இதனால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.