ஒரே நடிகருடன் மீண்டும் மீண்டும் இணையும் நடிகை அதுல்யா ரவி- காரணம் என்ன தெரியுமா?
Athulya ravi acting with jai

அதுல்யா ரவி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழில் 2017 -ம் ஆண்டு வெளிவந்த காதல் கண் கட்டுதே திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அந்த திரைப்படமே இவரை பிரபலமாக்கியது. அதன் பிறகு பல படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது சசிக்குமாருடன் இவர் நடித்துள்ள நாடோடிகள்-2 படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கத்தில் ஜெய்யுடனும் கேப்மாரி படத்தில் நடித்து வருகிறார்.
ஆனால் இப்படம் ரிலீஸாகும் முன்னரே அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் மற்றொரு படத்திற்காக மீண்டும் ஜெய்யும் அதுல்யாரவியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜெய்யின் முன்னாள் காதலி நடிகை அஞ்சலி அதுல்யா ரவிக்கு நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஜெய்யுடனே மீண்டும் அதுல்யா இணைந்ததற்கு அஞ்சலி தான் காரணமோ என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.