பிக்கில்பால் விளையாட்டு அணியை வாங்கிய இயக்குனர் அட்லீ; பெங்களூர் ஜவான்ஸ் அறிவிப்பு.!
பிக்கில்பால் விளையாட்டு அணியை வாங்கிய இயக்குனர் அட்லீ; பெங்களூர் ஜவான்ஸ் அறிவிப்பு.!
இயக்குனர் சங்கரிடம் எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி, ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், ஜவான் ஆகிய படங்களை இயக்கி வழங்கியவர் அட்லீ.
ஷாரூக்கானுடன் இவர் கைகோர்த்து இயக்கி வழங்கிய ஜவான் திரைப்படம், மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. படத்தின் வசூல் ரூ.1500 கோடிகளை கடந்தது.
இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தம்பதியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த தளபதி விஜய்.!
இந்நிலையில், அட்லீ மற்றும் அவரின் மனைவி கிருஷ்ண பிரியா சேர்ந்து, பிக்கில்பால் (Pickleball League) விளையாட்டு அணியை வாங்கி இருக்கின்றனர். இருவரும் பெங்களூர் ஜவான்ஸ் என்ற அணியை வாங்கி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: Retro: பெட்டியுடன் கேங்காக புறப்பட்ட சூர்யா; ரெட்ரோ படக்குழு வெளியிட்ட பொங்கல் கிளிக்ஸ்.!