#GoodNews: நல்ல செய்தி சொன்ன இயக்குனர் அட்லீ.. வாழ்த்து மழையில் நனையும் அட்லீ - கிருஷ்ண பிரியா..!
#GoodNews: நல்ல செய்தி சொன்ன இயக்குனர் அட்லீ.. வாழ்த்து மழையில் நனையும் அட்லீ - கிருஷ்ண பிரியா..!

தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக கருதப்படும் ஷங்கரிடம் எந்திரன், நண்பன் ஆகிய படங்களில், இயக்குனர் ஷங்கருக்கு உதவியாளராக பணியாற்றியவர் அட்லீ குமார்.
அதனைத்தொடர்ந்து, அட்லீ குமார் தனது முயற்சியால் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸின் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைத்து ராஜா ராணி என்ற படத்தை இயக்கி காதலர்களின் நெஞ்சை கவர்ந்திழுத்தார்.
அவரின் முதல் திரைப்படமே வசூலிலும், வரவேற்பிலும் என அமோக வெற்றி பெற்ற நிலையில், விஜயுடன் தெரி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ஜவான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
அட்லீ கடந்த 2014ல் திரைப்பட நடிகை கிருஷ்ண பிரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் அன்போடு வாழ்ந்து வந்த நிலையில், தற்போது கிருஷ்ண பிரியா கர்ப்பமாக இருக்கிறார். அதனை தனது சமூக வலைதளபக்கங்களில் இயக்குனர் அட்லீ பகிர்ந்து இருக்கிறார்.