"நான் வேண்டுமென்றே படங்களை காப்பியடிக்கவில்லை" இயக்குனர் அட்லீ உருக்கம்!
நான் வேண்டுமென்றே படங்களை காப்பியடிக்கவில்லை இயக்குனர் அட்லீ உருக்கம்!
ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. முன்னதாக இவர் இயக்குனர் ஷங்கரிடம் எந்திரன், நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். தொடர்ந்து இவர் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என வெற்றி படங்களைக் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து ஷாருக்கானை வைத்து "ஜவான்" படத்தை இயக்கியதின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார் அட்லீ. இந்தப் படம் 1100கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர் மீது எப்போதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு, அட்லீ மற்ற படங்களை காப்பியடிக்கிறார் என்பது தான்.
அந்தவகையில் ராஜா ராணி மௌனராகம் படத்தின் காப்பி என்றும், தெறி சத்ரியன் படத்தின் காப்பி என்றும், மெர்சல் அபூர்வ சகோதரர்களின் காப்பி என்றும் விமர்சகர்கள் தொடர்ந்து அட்லீயை விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார் அட்லீ.
அவர் கூறியதாவது, "ஒரே மாதிரியான கருத்துக்கள் பல படங்களில் இயல்பாகவே உள்ளன. பல பிரிவுகளில் நான் நேர்மையாக வேலை செய்தபோதும் என்னை மட்டுமே தாக்கி விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. நான் வேண்டுமென்றே காப்பியடிக்கவில்லை" என்று உருக்கமாக கூறியுள்ளார்.