தனது காதல் கணவருக்கு கவிதையாக வாழ்த்து கூறிய அட்லீயின் மனைவி, எவ்வளவு அருமையா சொல்லியிருக்காங்க பாருங்க .!
தனது காதல் கணவருக்கு கவிதையாக வாழ்த்து கூறிய அட்லீயின் மனைவி, எவ்வளவு அருமையா சொல்லியிருக்காங்க பாருங்க .!
தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குநர் அட்லி. இவ்வாறு வெற்றிப்பாதையில் பயணம் செய்துகொண்டிருக்கும் அட்லீ இன்று தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்.
மேலும் அட்லியின் பிறந்த நாளான இன்று, நடிகர்கள், நடிகைகள்,இயக்குனர்கள் என பல்வேறு திரை பிரபலங்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவருடைய காதல் மனைவி ப்ரியா, தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ஆசை கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
உன்னிடமுள்ள அனைத்து விஷயங்களையும் நான் வியக்கிறேன். உன்னை விடவும் எனக்கு ஒரு சிறந்த நண்பன் கிடையாது. உங்களை விடவும் ஒரு சிறந்த கணவர் கிடையாது. உங்களை விடவும் ஒரு சிறந்த மகன் கிடையாது. உங்களை விடவும் ஒரு சிறந்த மருமகன் கிடையாது. நான் வியக்கும் மனிதருடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டு அவருடன் இருப்பதை ஆசிர்வாதமாகக் கருதுகிறேன். என் அனைத்துமாக உள்ள அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
மேலும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்