ஒவ்வொரு செகண்டும் டிவிஸ்ட்.! ரசிகர்களை மிரள வைக்கும் காளிதாஸ் ஜெயராமின் அவள் பெயர் ரஜ்னி ட்ரைலர்.!
ஒவ்வொரு செகண்டும் டிவிஸ்ட்.! ரசிகர்களை மிரள வைக்கும் காளிதாஸ் ஜெயராமின் அவள் பெயர் ரஜ்னி ட்ரைலர்.!
விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களின் வெற்றிக்கு பிறகு காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அவள் பெயர் ரஜ்னி. இத்திரைப்படத்தை நவரசா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரில்லர் பரபரப்பு கதையம்சம் கொண்ட இந்தப் படத்தை வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கியுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில் நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அவள் பெயர் ரஜ்னி திரைப்படத்தின் ட்ரைலர் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு நொடியும் பரபரப்பாகவும் திருப்பங்களுடனும் வெளிவந்த இந்த ட்ரைலர் வீடியோ ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. மேலும் துப்பறியும் திரில்லராக உருவாகியுள்ள அவள் பெயர் ரஜ்னி திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.