கொரோனா சமயத்தில் வாரி வாரி கொடுத்த வில்லன் நடிகர் சோனு சூட்.! மனித நேயத்தை பாராட்டி விருது வழங்கிய ஐ.நா!
award for soonu sood
கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் முதல் வேலையில்லாத தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் உதவி செய்து மக்கள் மனதில் ஹீரோவாகியுள்ளார் வில்லன் நடிகர் சோனு சூட். கொரோனா சமயத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக தனது சொந்த செலவில் நூற்றுக்கணக்கான பஸ்களை ஏற்பாடு செய்து அவர்களது ஊருக்கு அனுப்பி வைத்தார். இதேபோல் மருத்துவ உதவி, மாணவர்களுக்கு கல்வி உதவி என பல்வேறு உதவிகளை செய்து அசத்தினார்.
வில்லன் நடிகர் சோனு சூட் அவரது பிறந்தநாள் பரிசாக கொரோனாவால் வேலையிழந்த 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தர உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இவரின் இந்த மனித நேய செயல்களை அறிந்த ஐக்கிய நாடுகள் சபை இவருக்கு விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது.
வில்லன் நடிகர் சோனு சூட் அவர்களின் சேவைக்காக ஐ.நா., மேம்பாட்டு திட்டத்தின் 'சிறப்பு மனிதநேய விருது அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 28ம் தேதி அவர் இந்த விருதினை பெற்றுக் கொண்டார். இந்த விருதினை இதற்கு முன், ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லியோனார்டோ டிகாப்ரியோ, பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.