அயலி பட அம்மா நடிகையா இது.?! கிளாமர் தூக்கலான வீடீயோ வைரல்.!
அயலி பட அம்மா நடிகையா இது.?! கிளாமர் தூக்கலான வீடீயோ வைரல்.!
ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி சினிமா ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் சமூகத்தில் பெண் கல்வி பற்றிய தாக்கத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்திய வெப் சீரிஸ் அயலி. இயக்குனர் முத்துக்குமாரின் இயக்கத்தில் உருவான அயலி இணையதள தொடரில் அபி நக்சத்ரா, அனுமோல், லிங்கா, சிங்கம் புலி உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதில் அயலியின் அம்மாவாக நடித்திருந்தவர் அனுமோல். இவர் இந்த தொடருக்கு முன்பாகவே தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சத்யராஜுடன் இவர் நடித்த 'ஒரு நாள் இரவில்' என்ற திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் மலையாள சினிமாவிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். எப்போதும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வரும் இவர் அயலி தொடரிலும் கிராமத்து அம்மாவாக குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த காலங்களில் சமூக வலைதளங்களில் இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி அயலியின் அம்மாவா இது என ஆச்சரியப்பட வைத்திருக்கின்றன. நீச்சல் குளம் புகைப்படங்கள், மாடர்ன் புகைப்படங்கள் என உச்சகட்ட கவர்ச்சியின் வழியாக இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றன.